நியூஸிலந்தில், ஒக்லாந்து நகரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு டெல்ட்டா வைரஸ் பரவியுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து முடக்கப்பட்ட ஒக்லாந்தில் மேலும் 32 பேருக்குக் தொற்று ஏற்பட்டுள்ளது. வைகாட்டோ பகுதியில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்துது, நியூஸிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், வைக்காட்டோவில் 5 நாள் முடக்கநிலையை அறிவித்துள்ளார்.
ஒக்லாந்து, தொடர்ந்து முடக்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் நாளை முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அங்கு இதுவரை, 1,328 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தகுதிபெற்றவர்களில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால், நியூஸிலந்தில் நடப்பில் உள்ள கடுமையான முடக்கம் தளர்த்தப்படலாம் என்பதைத் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது, அங்கு, 46 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டடுள்ளனர்.