கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி இன்று நிறைவு பெற்றது.
கடந்த 04.09.2021 அன்று “பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று நிறைவு செய்யப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் யாசகர்கள், கைவிடப்பட்டு வீதிகளில் கைவிடப்பட்டவர்களிற்கு பகல் மற்றும் இரவு உணவுகள் ஊடகவியலாளர்களால் சமைத்து வழங்கப்பட்டது. இதற்கு புலம்பெயர் உறவுகள், கிளிநொச்சி வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கியதுடன், ஊடகவியலாளர்களால் சமைத்து வழங்கப்பட்டது.
அத்துடன், ஆடைகள், முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் என்பனவும் கடந்த 30 நாட்களாக கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார், பொதுமக்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
30வது நாளான இன்று ஊடகவியலாளர்களின் நிதி பங்களிப்புடன் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன், தென்னிந்திய திருச்சபையின் உதவியுடன் ஆடை, நுளம்புவலை, பாய், துவாய் ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைத்த புலம்பெயர் உறவுகள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்களிற்கு ஊடகவியபாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குறித்த வேலைத்திட்டத்திற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பணிக்கு மக்கள் நன்றி தெரிவித்துமுள்ளனர்.