பண விவகாரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில்இந்த சம்பவம் நடந்தது.
கணவனின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.
31 வயதுடைய பலநோக்கு கூட்டுறவு வீதி, மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்றையதினம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது
இந்த சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் தொழில் புரிந்தவர். அண்மையில் நாடு திரும்பியிருந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த போது அவரால் அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் கேட்ட போதே இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது