25.9 C
Jaffna
January 1, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா புகலிடம் வழங்கியது!

அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டென் ஹொங்கொங்கில் தங்கியிருந்த போது, இரகசியமாக அடைக்கலம் கொடுத்திருந்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.

சுப்புன் திலின கெலபத, நதீகா தில்ருக்ஷி நோனிஸ் தம்பதியினர், மற்றும் அவர்களின் குழந்தைகள் சேதும்தி மற்றும் தினாத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை டொராண்டோவை அடைந்தனர்.

“தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க” மொன்ட்ரியலுக்கு இந்த குடும்பம் சென்றுள்ளதாக, அவர்களிற்கு உதவிய தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்யாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருக்கான வாழிட அனுமதியை ரஷ்ய அரசாங்கம் வழங்கி வருகிறது.

செப்ரெம்பர் 11 தாக்குதலை தொடர்ந்து சொந்த நாட்டு குடிமக்களையும், பிற நாடுகளையும் அமெரிக்கா இரகசியமாக கண்காணித்தது தொடர்பாக இரகசியமான ஆவணங்களை ட்வர்ட் ஸ்னோவ்டென் வெளியிட்டார். அவர் சிஐஏ பணியாளராக இருந்தவர்.

இந்த இரகசியங்கள் பகிரங்கமானதால் அமெரிக்கா அரசு பெரும் அசௌகரியமடைந்தது. எட்வர்ட் ஸ்னோவ்டென் மிகப்பெரிய தேசத்துரோகமிழைத்ததாக கூறி, அமெரிக்காவால் கடுமையாக தேடப்பட்டார்.

அவர் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்து, பல நாடுகளில் அகதி அந்தஸ்து கோரினார்.

இறுதியாக ரஷ்யாவை சென்றடைய முன்னர் இரண்டு வாரங்களாக ஹொங்கொங்கில் தலைமறைவாக இருந்தார். 7 பேரை கொண்ட அகதிகள் குழுவொன்றுடன் அவர் இரகசியமாக தங்கியிருந்தார். இதில் 5 பேர் இலங்கையர். பிலிப்பைன்ஸை சேர்ந்த தாயும் மகளும் மற்றையவர்கள்.

இவர்கள் ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து கோரிக்கை சமர்ப்பித்திருந்தனர். அங்கு அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில், சுப்புன் கெலபத குடும்பம் கனடாவில் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது.

எட்வர்ட் ஸ்னோவ்டெனிற்கு புகலிடம் வழங்கிய குற்றச்சாட்டுக்களையடுத்து தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் அச்சத்தின் பேரில், தமது சட்டத்தரணிகள் மூலம் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களிற்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கியது.

எட்வர்ட் ஸ்னோவ்டெனிற்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்களில் 6 பேருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இலங்கை இராணுவத்தில் இருந்த தப்பியோடிய அஜித் புஷ்பகுமார என்ற நபருக்கு மட்டும் இதுவரை அடைக்கலம் கிடைக்காத நிலையில், ஹொங்கொங்கில் தங்கியிருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment