இலங்கை

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் வர்ணராமேஸ்வரன் கொரோனாவுக்குப் பலி

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்கள், ‘கொரோனா’தொற்று காரணமாக கனடாவில் மறைந்தார். மாவீரர் நாளன்று, துயிலுமில்லங்களில் ஒலிக்கும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ பாடல் உள்ளிட்ட பல்வேறு தாயகப் பாடல்களைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வாழ்க்கைச்சுருக்கம் விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம், சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!