23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

மீனவர், கிராமசேவகர் மீது கடற்படையினர் ‘வெறியாட்ட’ தாக்குதல்: சாள்ஸ் எம்.பி கண்டனம்!

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக தாக்கியுள்ளதாக வன்னி நாடாளுடன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர் அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது பத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசாலை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் இவ் அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இத் தாக்குதல் சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment