29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதோடு, பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில், வட மாகாண ஆளுநர் குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் குறித்த காணி தங்களுக்கு வேண்டும் என மடு தேவாலய பரிபாலனசபையினர் கோரி வந்ததுடன் குறித்த காணியை பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என நேற்று புதன் கிழமை (22) மாலை இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்க பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் வந்த நிலையில் இடைவழியில் வழி மறித்த கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணி பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில் மோட்டை வயல் காணிக்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ,,

தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!