ஜனாதிபதியின் ஐ.நா உரை முடிந்த பின்னர் நினைவஞ்சலிக்கு தடை!

Date:

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையிலேயே, பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற தடை உத்தரவின்றி, இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 34வது நினைவேந்தல் நிகழ்வு, கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி வந்தனர்.

ஜெனீவாவில் இலங்கை பரபரப்புகள் குறைந்தது மற்றும் ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றி முடிந்ததன் பின்னர் இந்த பாதுகாப்பு கெடுபிடி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்