தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை: இன்னொரு நுங்கம்பாக்கம் சம்பவம்!

Date:

தாம்பரம் ரயில் நிலைய வாயில் அருகே கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வந்த மாணவி ஸ்வேதா என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.

இதனால் மாணவி நிலைதடுமாறி விழவே, வாலிபரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 2016 ஜூன் மாதம் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) என்பவர் பயணிகள் கண்முன்னே இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்