மின்சார கட்டணம் செலுத்தாதவர்களிற்கான அறிவித்தல்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு மின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை நீட்டிக்க முடியாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று தெரிவித்தார்.

மின் கட்டணங்களை செலுத்தாதன் காரணமாக ஆழ்ந்த நிதி நெருக்கடியில் மின்சாரசபை சிக்கியுள்ளது. செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவை தொகை கிட்டத்தட்ட ரூ.44 பில்லியன்.

இந்த மாதத்திற்கான கட்டணங்கள் இதில் இணைக்கப்படவில்லை.

கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த மாதமும் மின்சாரம் துண்டிக்கப்படாது என்று உறுதியளித்தார்.

“தற்போது சுமார் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் அறவிடப்பட வேண்டும். எனினும் அதற்கு நாம் வட்டி அறவிடவில்லை. 12% இடைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை நாம் ஊக்கப்படுத்தியுள்ளோம். கட்டணம் செலுத்த கூடியவர்களும் செலுத்தவில்லை. அது தான் பிரச்சினை. முடிந்த அளவில் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.“ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்