நான் பேயானால் படம் வெற்றி: நிக்கி கல்ராணி!

Date:

நிக்கி கல்ராணி, சிவா ஜோடியாக நடித்திருக்கும் ‘இடியட்’, நகைச்சுவை கலந்த பேய் படம். இதில், நிக்கி கல்ராணி பேய் வேடத்தில் நடித்துள்ளார்.

அந்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-

‘‘என் முதல் படமே (டார்லிங்) பேய் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் நான்தான் பேய். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது, ‘இடியட்’ படத்தில் டைரக்டர் ராம்பாலா என்னை மீண்டும் பேயாக நடிக்க வைத்து இருக்கிறார். இதற்காக கொரோனா காலத்தில் அவர் என்னை அழைத்து, கதையை சொன்னார். அவர் கதை சொல்லும்போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் எல்லோரும் பயந்து கொண்டிருந்தபோது, நான் இந்த படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். ‘இடியட்’ படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. சிவா, ஆனந்தராஜ், மயில்சாமி, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோருடன் நடித்ததில் சந்தோசம்.

இந்தப் படத்தை ‘ஓ.டி.டி.’யில் நல்ல விலைக்கு வெளியிடும் வாய்ப்பு இருந்தும், ரசிகர்களுக்காக தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. நான் ஏற்கனவே ‘டார்லிங்’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களில் பேய் வேடத்தில் நடித்து இருக்கிறேன். அந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதுபோல் ‘இடியட்’ படமும் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அனைவரையும் சந்தோசப்படுத்தும்.’’

இவ்வாறு நிக்கி கல்ராணி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்