வவுனியா – பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை

Date:

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக பூவசரன்குளம் வைத்தியசாலையில் சாளம்பைக்குளம், பம்பைமடு, பூவரசன்குளம், வேலன்குளம், செக்கட்டிபுலவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒரு நாளுக்கு 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அறிவுறுத்தல்களை மீறி 500 பேருக்கு அதிகமாக பூவரசன்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைளைப் பின்பற்றாது தடுப்பூசி பெறுவதற்காக ஒன்று கூடினர்.

இதனைக் கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வழிப்படுத்த முற்பட்ட போது கிராம அலுவலர் மற்றும் கடமையில் நின்ற உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 மணி நேரம் பதற்றமான நிலை காணப்பட்டதுடன், இராணுவத்தினரும், கடமையில் இருந்த உத்தியோகர்த்தர்களும் குவிந்த மக்களை வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்