மாலைதீவுக்கு மணல் போனது!

Date:

மாலைத்தீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், க்யுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மாலைத்தீவிற்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக அண்மையில் வெளியான தகவலை தொடர்ந்து இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல் உறுதியாகியுள்ளது. ஆனால், புதிய தீவு ஒன்றை நிரப்பும் நோக்கமல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்