செப்ரெம்பர் இறுதிக்குள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இன்று வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது பேசிய இணை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கை வெற்றிகரமான கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தின் இறுதிக் கட்டத்தை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது என்றார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தனியார் துறை உட்பட மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
எனவே விவசாயம், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏற்றுமதிகள் போன்ற சில துறைகளில் முடக்கத்தின் போது நிவாரணங்களை வழங்கப்பட்டதாக கூறினார்.
2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன குறிப்பிட்டார்.
அமைச்சரவை கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு தேவையான அதிகாரங்கள் கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.




