முல்லைத்தீவில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!

Date:

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள சிங்களவர்கள் அபகரிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் சென்ற பிரதேச விவசாயிகளின் எதிர்ப்பினால் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

அத்தோடு குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விரைவில்  கலந்துரையாடல் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய், பூமடுகண்டல் பகுதி என்பது தமிழர்களுடைய பூர்வீக மானாவாரி வயல் நிலங்களாகும்.

கொக்குத் தொடுவாய் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு தமது பகுதிகளிலிருந்து இடம்பெயரும் வரையில் பூமடு கண்டல் பகுதியில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் நீண்டகால இடப்பெயர்வின் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்குத் தொடுவாய் பகுதியைச் சேர்ந்த தமிழ் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

மீள் குடியமர்த்தப்பட்ட பின் பூமடுகண்டல் பகுதியில் 138 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் தற்போது அப் பகுதியில் பெரும்போக மானாவாரி நெற் செய்கைக்கான ஆயத்தப்பணிகளில், வயல்நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் ஈடுபடும்போது, வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த சிங்களவர்கள் அதற்கு இடையூறு விளைவிப்பதுடன், விவசாய நிலங்களில் தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதித் தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிடம் முறையிட்டிருந்தனர்.

அதற்கமைய நேற்று (12) அந்தப் பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் விவசாயிகளுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றார். முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் அங்கு சென்றிருந்தார்.

தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்களிற்குள் அத்துமீறி நுழைந்த சிங்களவர்கள், அவற்றை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கஜேந்திரன் தலைமையில் அங்கு சென்றவர்கள், காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப் பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் வந்திருந்தார். உத்தியோகத்தருடன் கஜேந்திரன் எம்.பி கலந்துரையாடியதையடுத்து,  பிறிதொருநாளில் மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலர் தலைமையில் குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வது என்ற முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்