அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர். ஒரே வருடத்தில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர் என்ற அரிய சாதனையை படைக்கும் எதிர்பார்ப்பில் களமிறங்கிய நோவக் ஜோகோவிச் தோல்வியின் பின் கண்ணீர் விட்டு கதறியழுதார். அவர் இந்த வருடத்தில் விம்பிள்டன், பிரெஞ்ச், அவுஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றிருந்தார்.
The moment @DaniilMedwed did the unthinkable. pic.twitter.com/rucHjhMA63
— US Open Tennis (@usopen) September 12, 2021
இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Djokovic took out his frustration later in the game in a much safer way. #USOpen pic.twitter.com/DHqYHgiEAv
— Tennis GIFs 🎾🎥 (@tennis_gifs) September 12, 2021
கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.