அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து வீராங்கணையும் அவரே.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், 18 வயதான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் 19 வயதான கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மோதினர்.
1999 இற்கு பின்னர் அமெரிக்க ஓபன் இறுதியில் இளவயது வீராங்கணைகள் மோதிய முதல் சந்தர்ப்பம் இது.
It's a teenage dream 🎶@leylahfernandez | @EmmaRaducanu pic.twitter.com/QG5QfeKdUK
— US Open Tennis (@usopen) September 11, 2021
இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.
🇬🇧 @EmmaRaducanu is the youngest Grand Slam champion since @MariaSharapova at 2004 Wimbledon pic.twitter.com/kFRKuDy9IH
— US Open Tennis (@usopen) September 11, 2021
2004இல் மரியா சரபோவா 17 வயதில் விம்பிள்டன் பட்டம் பெற்றதன் பின்னர், இளவயதில் எம்மா ராடுகானுவே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

