செப்டம்பர் 13 ஆம் திகதிக்கு பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவு இன்று எட்டப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று காலை கூடவுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்ததால், பின்னர் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு முதலில் 20 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை விதிக்கப்பட்டது. பின்னர் ஓகஸ்ட் 28 ஆம் திகதியும், செப்டம்பர் 6 ஆம் திகதியும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
தற்போதுள்ள அறிவித்தல்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 13 திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட உள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1