24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
கிழக்கு

வவுணதீவு பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்ட சகோதரர்கள்!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிசாரால் குரூரமாக தாக்கப்பட்ட சகோதரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிசாரினால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தமது உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்களை வழிமறித்து, துப்பாக்கியால் சராமாரியாக முகத்தில் தாக்குதல் நடத்தப்படுள்ளது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விஷேட படையணி

east tamil

மீனவ குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாத விமானம் தொடர்பில் வெளியான அறிக்கை

east tamil

படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்

east tamil

புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

east tamil

யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்

east tamil

Leave a Comment