தப்பியோடிய கொரோனா தொற்றாளர்களால் ஒரு கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

Date:

வவுனியா தெற்கு சிங்கள சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் நொச்சிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடாத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்,

இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.

அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகளாக தொழில் செய்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்