இலங்கை

வவுனியாவில் 237 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

வவுனியாவில் 237 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 237 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சு.க தலைவருக்கு இடையூறு விளைவிக்க தடை!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

Pagetamil

முறிகண்டியில் ஆணின் சடலம் மீட்பு!

Pagetamil

போராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்!

Pagetamil

யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment