இலங்கை

வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பை பேராயர் தவிர்த்தமைக்கு காரணம் இதுதான்!

கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித், வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திக்க மறுத்துவிட்டார்.

குரானா (நீர்கொழும்பு) புனித மரியாள் தேவாலயத்தின் பங்குத் தந்தை காமினி பெர்னாண்டோ அடிகளார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு கடிதமொன்றை கர்தினாலுக்கு அனுப்பியிருந்ததாக குறிப்பிட்டார்.

எனினும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சந்திக்க தயாராக இருப்பதாக கர்தினால் பதிலளித்துள்ளார்.

நிபந்தனைகள் நிறைவேறும் வரை வெளியுறவு அமைச்சரை சந்திக்க மாட்டோம் என்று கர்தினால் உறுதியாக தெரிவித்ததாக அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று கர்தினால் எழுத்துமூலமாக வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

கத்தோலிக்க சமூகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கர்தினால் கூறியுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக காவல்துறை உட்பட ஊடகங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தாக்குதல்கள் மீதான விசாரணையில் நம்பிக்கையை உருவாக்கவில்லை,மாறாக சிதைக்கும் விதமாக உள்ளதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மைத்திரி விலகினார்… விஜயதாச தலைவராகினார்!

Pagetamil

யாழில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் கைது!

Pagetamil

யாழ்- நாகை கப்பல் சேவை தள்ளிப்போனது!

Pagetamil

தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்து கொள்வோம்: எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

Pagetamil

Leave a Comment