சமந்தாவை பிரிந்து அப்பா வீட்டுக்கு போன கணவர்: விரைவில் விவாகரத்து?

Date:

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து பெறப் போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமதியான பிறகு சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார் சமந்தா. இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது.

சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெலுங்கு ஊடகங்களில் கூறப்பட்டிருப்பதாவது,

சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துவிட்டனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க
நாகர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.

நாக சைதன்யா தன் அப்பாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். சமந்தா தனியாக வசித்து வருகிறார். பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த ஜோடி பிரிவதை பார்த்து டோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து பேச்சு ஒருபக்கம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கியிருப்பதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்