இதுவரை அறிந்திராத விவேக் பற்றிய தகவல்கள் : சகோதரி சொன்ன சீக்ரெட்.நகைச்சுவை மன்னனாக வெள்ளித்திரையில் வலம் வந்து மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞர் நடிகர் விவேக். விவேக் கடந்த ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பாரத வகையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது பெருமைகளையும், நினைவுகளையும் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் சின்ன கலைவாணர் விவேக் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் விவேக்கின் சகோதரி கலந்து கொள்கிறார். இதுவரை விவேக் குறித்து வெளியுலகினர் பலரும் அறிந்திராத தகவல்களை அந்நிகழ்ச்சியில் அவர் பதிவு செய்துள்ளார். நடிகர் விவேக் சிறுவயதில் இசை மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வமும், எந்த இசை கருவியானாலும் அதை உடனே கற்றுக்கொண்டு வாசிக்கும் அவரது திறமை குறித்தும் அவர் பேசிய பதிவுகள் வெளியாகியுள்ளது.
சின்ன கலைவாணர் விவேக் நிகழ்ச்சியின் இந்த எபிசோட் வருகிற ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது