25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
விளையாட்டு

24 பந்தில் 12 றன்கள் மட்டுமே கொடுத்த தாஹிர்: கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்!

கரீபியன் பிரீமியல் லீக் தொடர் ஆகஸ்ட் 26ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. முதல் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ், ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரிபான்கோ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய கயானா அமேசான் அணியில் ப்ரெண்டன் கிங், சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகியோர் ஓபனர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான துவக்கம் தரவில்லை. கிங் 9 ரன்களும், ஹேம்ராஜ் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அடுத்து ஒய்டன் ஸ்மித், ஹேட்மையர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இருவரும் அதிரடி காட்டியதால் ஸ்கோர் கிடுகிடுவென உயரத்துவங்கியது. இந்நிலையில் ஸ்மித் 24 (15) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஹெட்மையர் 41 பந்துகளில் இரண்டு சிக்ஸர் உட்பட 54 ரன்கள் குவித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக் (2), முகமது ஹபீஸ் (8) ஆகியோர் அதிக ரன்களை சேர்க்கவில்லை. இறுதியில், பூரன் 12 ரன்கள் அடித்தார். இதனால், கயானா அமேசான் 20 ஓவர்களில் 142/7 ரன்கள் மட்டுமே அடித்தது.

142 ரன்கள் சுலபமாக துரத்தக் கூடிய இலக்கு என்பதால், ட்ரிபான்கோ ஜெயித்துவிடும் என்றுதான் பலரும் கருதினார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. ஓபனர் சிம்மன்ஸ் வெறும் 5 ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சுனில் நரைன் (20), முன்ரோ (13), செய்பர்ட் (23) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்கள். ரம்டின் 28 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் பொல்லார்ட் 2 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மற்றவர்கள் யாரும் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், ட்ரிபான்கோ அணி 20 ஓவர்களில் 133/9 ரன்கள் மட்டும் சேர்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

42 வயதாகும் இம்ரான் தாஹிர், கயானா அணிக்காக முதல் போட்டியிலேயே அபாரமாகப் பந்துவீசினார். ட்ரிபான்கோ அணி முதல் 6 ஓவர்களில் சிக்ஸர் பவுண்டரி விளாசிய நிலையில், தாஹிர் வீசிய 7ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. நரைன் விக்கெட்டை எடுத்து இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஓவரிலும் டேரன் பிராவோவை பெவிலியனுக்கு அனுப்பி இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால்தான், ட்ரிபான்கோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி மற்ற போளர்கள் சிறப்பாகப் பந்துவீசி கயானாவை கதறவிட்டனர். தாஹிர் இப்போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள்வீசி 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். சிஎஸ்கேவுக்கும் தாஹீர் இதேபோல செயல்பட்டால் எப்படி இருக்கும்? என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment