அழகான குடும்பம் என்பது அந்நியோன்யமான தம்பதியரை முதன்மையாக கொண்டது. அதனால் தான் கணவன் மனைவிக்குள் உண்டாகும் விரிசல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை ஒட்டவைக்கவே எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் சமீப வருடங்களாக தம்பதியர் பொறுமையை இழந்து வருகிறார்கள். அவர்களால் சமாதானம் என்பது ஏதோ பெரிய தண்டனையாகவே பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஈகோவால் தங்களின் மகிழ்ச்சியை தாங்களே இழந்துகொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையில் உலகமே நொறுங்குவது போன்ற உணர்வு விவாகரத்தில் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் துணை விவாகரத்து கோரும் போது இந்த உணர்வை எதிர்கொள்வீர்கள். எப்படி இது நேர்ந்தது எப்போது திருமணத்தில் ஆர்வம் இழந்தார்கள் என்பதை நினைத்து குழப்பமாக இருப்பீர்கள். உங்கள் துணையின் முடிவு உங்களுக்கு தவறாக இருந்தால் நீங்கள் அவரை உங்கள் பால் திருப்ப என்ன செய்யலாம். உங்கள் உறவை மீண்டும் தொடங்க என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
பிரச்சினையை ஒப்புகொள்ளுங்கள்
உங்கள் துணையோடு உங்களுக்கு பிரச்சினை இருந்ததை ஒப்புகொள்ளுங்கள். உங்கள் துணையின் உணர்வுகளை அங்கீகரிக்க விரும்புவதாக சொல்லுங்கள். உங்கள் உறவை சரி செய்ய இது உதவும். அதே நேரம் கண்மூடித்தனமான அவரது விருப்பது செவிசாய்ப்பது உங்கள் உறவை மேலும் மோசமான பாதையில் தள்ளிவிட செய்யலாம். உங்கள் துணையிடம் பேசுங்கள். குறுக்கீடுஇல்லாமல் அவர் சொல்வதை கேளுங்கள். ஒருவேளை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு என்று அவரை பேசவிடுங்கள். அதோடு அது குறித்து ஆலோசிக்க உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேளுங்கள்.
மன்னிக்க கற்று கொள்ளுங்கள்
தவறு யார் மீது இருந்தால் ஒருவர் துணையிடம் மன்னிப்பு கோரும்போது எதிர்தாரர் மன்னிக்க முன்வரவேண்டும். இதயத்திலிருந்து வரும் மன்னிப்பு எல்லாவற்றையும் சரி செய்து விட முடியும். இது தான் உறவுகளை காயப்படுத்தியதற்கு உரிய மருந்தாகும். தவறு இரண்டு புறமும் நடந்திருக்கலாம். அதனால் தவறு அதிகம் செய்த அவர்தான் முதலில் மன்னிப்பு கோர வேண்டும் என்று நினையாமல் தயக்கமில்லாமல் முதலில் மன்னிப்பு வேண்டுங்கள். இது மற்றவரை நெகிழ்விக்க செய்யும்.
ஆலோசனை பெறுங்கள்
துணையுடன் எவ்வளவு பேசினாலும் மூன்றாவதாக ஒரு பெரியவர் முன்னிலையில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதால் புரிதல் அதிகரிக்கலாம். திருமண ஆலோசகர்கள், நிபுணர்கள், உளவியலாளர்கள் உங்கள் உறவில் இருக்கும் சிக்கலை சிக்கில்லாமல் களைந்தெடுக்க உதவுவார்கள். அவர்களுடனான அமர்வு சிக்கல்களை அடையாளம் காட்டும். ஒருவருக்கொருவர் மறைத்து வைத்திருக்கும் விஷயங்கள் வெளிப்படுவதன் மூலம் துணையின் நியாயமான கோரிக்கைகளை மற்றவர் புரிந்து கொள்ள முடியும். உங்கள் உறவில் இணக்கம் வருவதை இருவரும் முயற்சி எடுத்து இரு புள்ளியாக செயல்படாமல் ஒரு புள்ளியாக ஆக்குங்கள். துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். திட்டமிடுவதற்கு முன்பு அவர்களது கருத்தையும் கேளுங்கள். இருவரும் ஒரு பக்கமாக இருந்தால் ஆலோசனை விஷயத்தில் உங்கள் பிரச்சனை எளிதில் தீரும்.
பழி வேண்டாமே
இருவரும் ஒன்று என்ற அளவில் மகிழ்ச்சியை அனுபவித்த தம்பதியர் உணர்ச்சி வசப்பட்டு மற்றவர் மீது பழியை போடலாம். ஒருவர் அல்லது இருவரும் தவறாக அடுத்தவரை பழி போட்டிருக்கலாம். எக்காரணம் கொண்டும் கடந்த காலத்தை உரையாடலுக்கு கொண்டு வர வேண்டாம். இது மேலும் பிரச்சினையை அதிகரித்து தூரத்தை அதிகரிக்கும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போ என்று சொல்லலாம். அதாஅன் பாதிக்கப்பட்டவராயினும் பாதிப்பை உண்டாக்கியவராயினும் பழியை தவிர்த்து நியாயமான முறையில் உங்கள் தரப்பை சொல்லலாம். உங்கள் துணையுடன் நீங்கள் வாழ விரும்பினால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை எடுத்து காட்டுங்கள். உறவில் சில நேர்மறையை கொண்டு வருவது உங்கள் உறவை வலுப்படுத்தும்.
நம்பிக்கை கொள்ளுங்கள்
சுய இரக்கம் என்பது மோசமான ஒன்று. அது உங்கள் தன்னம்பிக்கையை சீர் குலைக்க செய்யும். உங்களை நம்புவது உங்கள் மீது நம்பிக்கை கொள்வது மிக முக்கியமானது. உங்கள் துணையை நீங்கள் விரும்புகிறீர்கள். உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால் உங்கள் உறவை மீண்டும் தொடங்க விரும்பினால் மனதளவில் உங்களை வலுவாக வைத்திருங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பது உங்கள் முயற்சிக்கு பலன் கொடுக்கும். உங்கள் துணை உங்களை நாடி வரும் போது உங்கள் முயற்சியை நிறுத்தாதீர்கள். சிறிய விரிசலுக்கு பிறகு மீண்டும் துளிர்க்கும் உறவில் மரக்கன்று நடுவது போன்று தான் உங்கள் உறவும். கவனமாக பார்த்து கொள்ளாவிட்டால் அது வாடி போகலாம்.