மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 8 மரணங்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன், 209 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 உட்பட 4 பேரும், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேவேளை மட்டக்களப்பில் 72 பேரும், களுவாஞ்சிக்குடியில் 53 பேரும், செங்கலடியில் 25 பேரும், வெல்லாவெளியில் 22 பேர் உட்பட மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் உட்பட 201 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் 20 வயது தொடக்கம் 40 வயது வரையில் 9 பேரும், 40 வயது தொடக்கம் 50 வயது வரை 16 பேரும், 50 தொடக்கம் 60 வயது வரையில் 39 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 137 பேரும் உயிரிழந்துள்ளதுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 வீதமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தில் 2,400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் இருந்தபோதும் கடந்த வாரத்தில் மட்டும் 2,093 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

சராசரியாக ஒரு நாளில் 300 மேற்பட்ட கொரோனா தொற்று நோயளர்கள் அடையாளங்காப்படுவதுடன் 5 மேற்பட்ட மரணங்களும் இடம்பெற்றுவருகின்றது. தற்போது 3456 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் அவர்களில் 2,600 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில்
வீதிகளில் பொதுமக்கள் நடாமட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்