பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி, அதற்கு பின்னும் சரி நெட்டிசன்கள் அனிதாவை விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அதை எல்லாம் புறந்தள்ளி அனிதாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று அவரது கணவர் பிரபா.
சமீபத்தில் சமீபத்தில் இரண்டாவது திருமணம் நாளை கொண்டாடியுள்ள அனிதா சம்பத் தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வளர்ச்சியோடு முழு காரணமாக இருந்து ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி கொடுக்க காதல் தவிர எதுவும் இல்லை. நம் காதல் போல் நாமும் வளர்வோம் !. இரண்டாம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள். காதலிக்க தொடங்கி 61 வது மாதம் ஆச்சு. சீக்கிரமா ஐ லவ் யூ சொல்லி தொலை .. ஐந்து வருஷமா வெயிட் பண்றேன் ”. என குறிப்பிட்டுள்ளார். இந்த இளம் ஜோடிகளுக்கு இடையே இப்படி ஒரு காதலா என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.




