கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொற்று நீக்கும் பணியில்!

Date:

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து
கிருமி தொற்று நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதுவரையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி
மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று (25) கிளிநொச்சி
மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள்
மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட
வீடுகளிற்குமாக தொற்று நீக்கி விசிரப்பட்டது.

மக்களின் நலன் கருதியும் கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக
இருக்கவும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாரிய
அளவில் சேவை செய்யும் சுகாதார துறையினருக்கு தாமும் ஒரு கை கொடுக்கும்
முகமாகவும் இன்றைய தினம் குறித்த தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டதாக
குறித்த ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்