வீட்டு உரிமையாளர்களிற்கு தொற்று: 17 நாய்கள், 20 பூனைகள் வீட்டுக்குள் 7 நாள் பட்டினி!

Date:

வீட்டின் உரிமையாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூட்டப்பட்ட வீட்டிற்குள் 7 ஏழு நாட்கள் உணவின்றியிருந்த 17 நாய்கள், 20 பூனைகள் மற்றும் ஒரு ஆமைக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 350 சதுர அடி பரப்பளவிலான சிறிய வீட்டில், இந்த விலங்குகளை வளர்த்த இரண்டு பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது களுபோவில போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மட்டேகொட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவர், உறவினர்களை தொடர்பு கொண்டு பிராணிகளிற்கு உணவளிக்க கோரியதாகவும், உறவினர்கள் அதற்கு சம்மதிக்காத நிலையில், கால்நடை மருத்துவர் மனோஜா வீரக்கொடிக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, மட்டேகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கால்நடை மருத்துவரும், பொலிசாரும் பிராணிகளிற்கு உணவளித்துள்ளனர்.

அந்த நேரத்தில், வீட்டில் பதினேழு நாய்கள், இருபது பூனைகள், ஒரு ஆமை மற்றும் இரண்டு பூனைகள் இருந்தன என்று கால்நடை மருத்துவர் மனோஜா வீரக்கொடி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்