ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் ஆற்றல் 6 மாதங்களிற்குள் குறைந்து விடும்: புதிய ஆய்வு முடிவு!

Date:

ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் ஒக்ஸ்போர்ட்/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களால் வழங்கப்படும் COVID-19 க்கு எதிரான பாதுகாப்பு ஆறு மாதங்களுக்குள் குறைந்துவிடுவதாக பிரித்தானிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

COVID-19 வைரஸிற்கு எதிராக பூஸ்டர் (booster) எனும் மூன்றாவது தடுப்பூசிகளைப் போட வேண்டியதன் அவசியத்தைக் கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் ZOE நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ZOE லிமிடெட் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட  ஆய்வு நிறுவனம்.  லண்டன் கிங்ஸ் கல்லூரியுடன் இணைந்து இலாப நோக்கற்ற முயற்சியாக கோவிட் வைரஸ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிரித்தானியாவின் சமூக பாதுகாப்புத் துறையால் நிதியளிக்கப்படுகிறது.

1.2 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனை முடிவுகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டன.

ஃபைசர் தடுப்பூசியின் ஆற்றல் 5 முதல் 6 மாதங்களில் 88 வீதத்திலிருந்து 74 வீதத்திற்கு குறைந்திருந்தது.

அஸ்ட்ராஜெனேகா தடுப்புமருந்தின் ஆற்றல் 4 முதல் 5 மாதங்களில், 77 வீதத்திலிருந்து 67 வீதத்திற்கு குறைந்தது.

முன்னதாக, குறைந்தது 6 மாதங்களுக்கு வைரஸிற்கு எதிரான தடுப்பாற்றல் நீடிக்கும் என்று கூறப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்