குறைப் பிரசவ குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்

Date:

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. இந்த மாதிரியான குழந்தைகளைச் சிறப்புப் பிரிவினரில் வைத்துள்ளது மருத்துவம்.

குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக உள்ளது, பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போடலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருப்பதால், தடுப்பூசி போடுவதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (கேஜ்) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.

ஹெபடைட்டிஸ் – பி மஞ்சள் காமாலை உள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி மற்றும் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து இந்தத் தடுப்பூசியை முறையே ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என மூன்று தவணைகள் குழந்தைக்குப் போட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்