மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் போண்டா

Date:

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்:

 சிக்கன் கைமா – கால் கிலோ,

  சின்ன வெங்காயம் – 50 கிராம்,

 போண்டா மாவு – 250 கிராம்,

 சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

 மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

 காய்ந்த மிளகாய் – 2,

 பூண்டு – 5 பல்,

 கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

 சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

 மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

 தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

 பொட்டுக்கடலை – 50 கிராம்,

 இஞ்சி – 2 சிறிய துண்டு,

 கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

 செய்முறை:

 சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

 பொதுவாக சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

 முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடவும்.

 போண்ட மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

 அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்