மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க மாட்டேன்: பஜ்ரங் பூனியா அறிவிப்பு

Date:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட இந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் நோர்வேயில் வருகிற அக்டோபர் 2 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட முடியாது.

இது குறித்து பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவை சரிப்படுத்துவதற்காக உடற்பயிற்சியை 6 வாரம் மேற்கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது. இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் தவிர வேறு முக்கியமான போட்டியில்லை. இந்த சீசனில் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எனக்கு கிடையாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வலியுடன் பங்கேற்று தான் பதக்கம் வென்றேன்’ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்