2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பிரபல தமிழ் வர்த்தகர் மாவடிவேம்பில் கைது

Date:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்திற்கு கொண்டு வரத்தயார் நிலையிலிருந்த 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் போதைப்பொருள் வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து இன்று 2021-08-22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் வர்த்தகரே அதிகளவான கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பிறைந்துரைச்சேனை பிரதேசத்துக்கு வினியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

33 வயதுடைய இவரிடமிருந்து 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் நடவடிக்கை காரணமாக மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் உட்பட போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன், வெளிமாவட்டங்களிலிருந்து கல்குடா பிரதேசத்துக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வருவோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்