மஹாராஷ்டிரா மாநில புனேயில், ராணுவ விளையாட்டு நிறுவனம் 2001 ல் தொடங்கப்பட்டது. இங்குள்ள மைதானத்தில், ராணுவ விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், நீச்சல், வாள் சண்டை, மல்யுத்தம் என ஏழு வகையான விளையாட்டுகளுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி அளிக்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2016 ல் ராணுவத்தில் இணைந்தார். அப்போது இங்கு தான் பயிற்சி பெற்றுள்ளார். இவரை கவுரவிக்கும் விதமாக இம்மைதானத்தின் பெயர், ‘நீரஜ் சோப்ரா ராணுவ விளையாட்டு மைதானம்’ என பெயரிடப்பட உள்ளது. விருது விழா ஆகஸ்ட் 23 ல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி நரவனே, தலைமையில் நடக்கிறது. இதில் ராணுவத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 16 வீரர்கள் பங்கேற்கின்றனர்.