மன்னார் திருக்கேதீச்சர சிறுவர் இல்லத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்கள் 26 பேர் உள்ளடங்களாக மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (21) மாலை 46 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மேலும் 46 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

-இவர்களில் 26 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

-ஏனையவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, முருங்கன் வைத்தியசாலை, அடம்பன் வைத்தியசாலை, பேசாலை வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலை, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 399 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1423 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1440 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்