உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது: எரிபொருள் விலையை குறையுங்கள்!

Date:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அந்த அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கருத்து தெரிவிக்கையில், ஜூலை 30 ஆம் திகதி 73 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 62 டொலராக குறைந்துவிட்டது.

உலக சந்தையில் விலைகளின் அடிப்படையில் உள்ளூர் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், எரிபொருள் விலை இப்போது குறைக்கப்பட வேண்டும் என்று விதானகே வலியுறுத்தினார்.

ஜூலை 11 ஆம் திகதி எரிபொருள் விலை உயர்த்தப்பட்டபோது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70.91 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாக அவர் கூறினார்.

கணிப்புகளின்படி கச்சா எண்ணெய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை தற்போதைய விலையில் தேக்க நிலையில் இருக்கும், எனவே இந்த நன்மையை பொதுமக்களுக்கு வழங்குமாறு நிதி அமைச்சரை அவர் வலியுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்