சந்தோஷத்தில் விக்னேஷ்சிவன்-நயன்தாரா : இதுதானா சம்பவம்

Date:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஹைதராபாத், சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன் பிறகு வைரஸின் இரண்டாம் அலை தீவிரமானதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. முக்கோண காதல் கதை கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா அன்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து நயன்தாராவும் படப்பிடிப்புதளத்திற்கு வந்துவிட்டார்.
நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அவர் தனது ரசிகர்களை பார்த்து கையசைத்துள்ளார்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவுடன் சேர்ந்து தனது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன். படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். நயன்தாராவும், சமந்தாவும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு விக்னேஷ் சிவனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் இது. முன்னதாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்புக்குரம்பமான ஆஆ விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...

UPDATE: முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கியது இப்படித்தான்!

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாக கொழும்புப்பிட்டிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்