கொய்யாப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!

Date:

இரத்த அழுத்த பாதிப்பு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருந்தால் தமனி பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சராசரியாக இரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். அது 180/90 என்ற நிலைக்கு மேலே சென்றால் உயர் இரத்த அழுத்த பிரச்சினை காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரும். உயர் இரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வருவது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, இதயநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் உருவாகுவதற்கான அபாயத்தை அதிகரிக்க கூடும். மற்ற உணவு வகைகளை விட கொய்யா பழத்தில் பொட்டாசியத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க வேளாண் துறையின் கருத்துப்படி 100 கிராம் கொய்யா பழத்தில் 417 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கரோடினாய்டுகள், பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை இதயத்தை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும்.

சுகாதார வல்லுனர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு கொய்யாவை பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட விற்றமின் சி சத்து நான்கு மடங்கு அதிகம் இருக்கிறது. அது இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும். பக்கவாதம், மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கு விற்றமின் சி பக்கபலமாக இருப்பதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

கொய்யா பழத்தில் உள்ள விற்றமின் சி இரத்த நாள சுவர்களின் உள்புற ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா பழமோ, கொய்யா ஜூஸோ பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்