29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
விளையாட்டு

அனைவர்  கவனத்தையும் ஈர்த்த புதுமுக பந்து வீச்சாளர் !

ஐபிஎல் 14 ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்ட சில வீரர்களுக்கு நோய் கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.

மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட சில ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனிமை முகத்தில் உள்ளன. சிஎஸ்கே விரைவில் பயிற்சியைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதில் எவ்வித சிக்கல் இருக்காது என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இப்படி ஐபிஎல் வேலைகள் வேகமெடுத்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ், பஞ்சாப் அணியின் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஐபிஎல் 14 ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் நபருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய அணியின் புதுமுக பௌலர் நாதன் எல்லீசை பஞ்சாப் கிங்ஸ்
அணி ஒப்பந்தம் செய்துள்ளது . எல்லீஸ், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் போது ஒரு அணிகூட இவரை வாங்கவில்லை. ஆனால், தற்போது இவருக்காக பல அணிகள் போட்டிபோட்ட நிலையில் இறுதியில் பஞ்சாப் அணி தட்டி தூக்கியுள்ளது.
இதற்கெல்லாம் காரணம், ஒரேயொரு போட்டிதான். நாதன் எல்லீஸ் பிக் பாஷ் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தியிருந்தார். இதனால், வங்கதேசத்திற்கு எதிரான டி 20 தொடருக்கு அவர் தேர்வு செய்தார். அப்போது, ​​அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இதன்காரணமாகத்தான், பஞ்சாப் அணி இவருக்கு கடும் போட்டிபோட்டு, வாங்கியுள்ளது. நாதன் எல்லீஸ் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார், விக்கெட் மழை பொழிவார் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment