ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்களிற்கு உரையாற்றி வருகிறார்.
அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு-
♦மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்கள், 4.5 மில்லியன்நாளாந்த உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சுற்றுலா பாதிக்கப்பட்டது, ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டது.
♦இந்த காரணத்தினால்தான் முடக்கம் விதிக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் தாக்கத்தைத் தாங்கும் இடத்தில் இல்லை, இருப்பினும், வைரஸ் வேகமாக பரவுவதையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, 10 நாட்களுக்கு முடக்கல் முடிவு எடுக்கப்பட்டது.
♦நாட்டைப் பலமுறை பூட்ட முயற்சித்திருந்தாலும், இதுபோன்ற முடிவுகளின் உப விளைவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ – தொழில்களின் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தில் விளைவுகளை.
♦முன்னணி சுகாதார ஊழியர்களின் தியாகத்தை பாராட்டுகிறேன். நீண்ட காலத்திற்கு நாடு பூட்டப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இன்னும் பல தியாகங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நேரத்தில், இந்த வைரஸை தோற்கடிக்க ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்கிறேன். ‘
♦தடுப்பூசிதான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழியென உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்தலில் இலங்கை உலகில் முன்னணியில் உள்ளது.
(வரும்)



