எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் உதய கம்மன்பில!

Date:

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென தெரிவித்தார்.

அப்படியொரு நிலைமையேற்பட்டால், அதை முதலில் தானே மக்களிற்கு அறிவிப்பேன் என்றும், மக்களிற்கு உண்மையாக இருப்பதால், எரிபொருள் விலையேற்றத்தையும் தானே முதலில் அறிவித்ததாக குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்