நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.
எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென தெரிவித்தார்.
அப்படியொரு நிலைமையேற்பட்டால், அதை முதலில் தானே மக்களிற்கு அறிவிப்பேன் என்றும், மக்களிற்கு உண்மையாக இருப்பதால், எரிபொருள் விலையேற்றத்தையும் தானே முதலில் அறிவித்ததாக குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1