நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல், இன்று இரவு முதல் அறிவிக்கப்பட்ட முடக்கல் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
ஒரு மாதத்திற்கான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன் பில இன்று அறிவித்திருந்தார்.
எனினும், அதை பொருட்படுத்தாத மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. யாழ் மாவட்டத்தின், கொடிகாமத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் காணொலி இது.
புகைப்படத்தில் இணைக்கப்பட்ட காட்சி, கொழும்பில் இன்று பதிவானது.



