வெளியில் பெயர் பலகை கூட இல்லை: கிளிநொச்சியில் இரகசியமாக திறக்கபட்டது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்!

Date:

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்
(OMP) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின்
பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது
அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில்
பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம்
அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த
பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான OMP அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும்
கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன்
தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு
தெரியாது என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே
தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம்
திறக்கபட்டது என தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்
அவர்களிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை
காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை
கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள். அதற்கமைவாக
மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை
ஆரம்பித்திருகின்றார்கள் என்றார்.

இதேவேளை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் OMP அலுவலகத்திற்கு எதிரராக குரல்
கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்