தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் கைவசம் அரண்மனை 3, வட்டம், மல்லிகை, கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமலின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலைதீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா, அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1