கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து செல்லும் நிலையில், நாட்டை முடக்க வேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அதிகாரிகள் நாட்டை முடக்க கோரி வந்த போதும், அரசு விடாப்பிடியாக மறுத்து வந்த நிலையில், அரச பங்காளிகள் மற்றும் மகாநாயக்கர்கள் என பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதால், முடக்க அறிவிப்பை அரசாங்கம் விடுக்கலாமென தகவல் வெளியாகியுள்ளது.
நாளை இரவு முதல் முடக்க அறிவிப்பு விடுக்கப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியின் வாராந்த கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகுமென தெரிகிறது.



