27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil
விளையாட்டு

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: பின்தள்ளப்பட்ட கோலி

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் அல்லது கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த பிறகு, ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியீடு வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதல் 10 இடங்களில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 180 ரன்கள் விளாசிய ஜோ ரூட் 893 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் உறுப்பினர்கள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். அடுத்து 5,6,7 ஆகிய இடங்களில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த் வீரரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாம் தற்போது 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அடுத்து, ஆஸ்திரேலிய அணியின் ஓபனர் டேவிட் வார்னர் 9 ஆவது இடத்தையும், தென்னாப்பிரிக்க அணியின் குவின்டன் டி காக் 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்ட காலம், முதலிடத்தில் இருந்த கோலி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரன்களை குவிக்கத் தவறி, தரவரிசையில் பின்னடைவை சந்திக்கத் தொடங்கினார். தற்போது 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இனி வரும் போட்டிகளிலும் சொதப்பும் பட்சத்தில், தரவரிசையில் மேலும் பின்னடைவை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!