சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M32 மாடலை வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 32 ஸ்மார்ட்போனின் 4 ஜி வேரியண்ட் ஆனது கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
இருப்பினும், 5 ஜி வேரியன்ட் (ஒப்பீட்டளவில்) மிகவும் சிறிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று அமேசான் தலத்தில் உள்ள பிரத்யேக பக்கத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் பக்கம், சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செல்பீ கேமராவுக்கான நாட்ச் வடிவமைப்புடன் வரும் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது.
நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில், சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி மாடலை அறிமுகப்படுத்தி அதன் 5 ஜி ஸ்மார்ட்போன்களின் வரம்பை மிட் ரேன்ஜ் பிரிவிற்குள் நகர்த்தி விரிவுபடுத்தியது.
இப்போது இந்த தொடரின் அடுத்த 5ஜி ஸ்மார்ட்போன் – சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி – இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 25 மதியம் 12 மணிக்கு (மதியம்) அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முன்னரே குறிப்பிட்டபடி, சில பிரத்தியேக விவரங்களை வெளிப்படுத்தும் பிரத்யேக அமேசான் பக்கமும் இந்த ஸ்மார்ட்போனிற்காக அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் Samsung.com, Amazon, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து வாங்க கிடைக்கும் என்கிற தகவலையும் அறிய முடிகிறது.